கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அவருடைய மகன் நரேன் கார்த்திக் (20), கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சமீபத்தில் அவரது தாய் ராஜகுமாரி, உடல் நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். இதனால் மனமுடைந்திருந்த நிலையிலிருந்து நரேன் கார்த்திக். இந்நிலையில் அவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி அந்த பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை அறிந்த நரேன் கார்த்திக் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே கோவையில் இருந்து ஊருக்கு திரும்பிய அவர், காதலியை இழந்த துயரத்தில் மனம் தளர்ந்து, விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

அவரை மயக்கநிலையிலக் கண்ட குடும்பத்தினர், உடனே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து நரேனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம்  அந்த பகுதியில்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.