தென்னிந்திய திருமண விழா ஒன்றில், விருந்தினர்களை உபசரித்த விதம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த விழாவில் சர்வதேசப் பிரபலங்கள் இல்லை; ஆனால், விருந்தினர்களுக்கு வைக்கப்பட்ட உபசரிப்பு மற்றும் பிரமாண்டமான அமைப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. விருந்தாளிகள் அனைவரும் பாரம்பரியமாக வாழை இலையில் உணவு சாப்பிடுகிறார்கள்.

ஆனால், அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் தான் சிறப்பு! தங்க முலாம் பூசப்பட்ட, மயில் உருவம் கொண்ட சிம்மாசனத்தின் முதுகுப் பகுதியில் சாய்ந்தபடி அவர்கள் சாப்பிடுகிறார்கள். ​இந்த அமைப்பைப் பார்த்த பலர், “இது அரசர்கள் சாப்பிடும் இடம் போல இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் “அம்பானி திருமணத்தில் கூட இப்படி ஒரு ஏற்பாடு இருக்காது” என்றும் கிண்டலாகக் கூறியுள்ளனர்.

விருந்தினர்களைக் கடவுளாக மதித்து, அவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கும் இந்திய கலாசாரத்தை இந்த விருந்து அமைப்பு காட்டுவதாகப் பலர் பாராட்டியுள்ளனர். பாரம்பரியமான விருந்தை, மறக்க முடியாத ஆடம்பரமான அனுபவமாக மாற்றியதற்காக இந்த விழாவை நடத்தியவர்களை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.