இன்றைய இளைஞர்கள் சிலர், சமூக ஊடகங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘பார்வைகள்’ பெறுவதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ரீல்ஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஒரு இளைஞன் ஓடும் பெரிய டிரக்கின் அடியில் ஸ்கேட்டிங் செய்துகொண்டே புகுந்து அதிர்ச்சி அளித்துள்ளான். சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த அபாயகரமான சாகசம் எந்த நேரத்திலும் பெரிய விபத்தாக மாறியிருக்கலாம்.
Reels की भूख इतनी बढ़ गई,कि मौत के नीचे शूटिंग हो रही है।
Reels के लिए जिंदगी को जुआ मत बनाओ।
आज स्टंट, कल एम्बुलेंस फर्क बस कुछ सेकंड का है। pic.twitter.com/YjlC3vau2R— TANVEER (@mdtanveer87) December 11, 2025
இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் கோபமடைந்து, “சில லைக்குகளுக்காக ஏன் உயிரை பணயம் வைக்கிறீர்கள்?”, “இன்று ஸ்டன்ட், நாளை ஆம்புலன்ஸ்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களைச் சமூக ஊடக தளங்கள் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரீல்ஸ் மோகம் இளைஞர்களை எவ்வளவு தூரம் கண்மூடித்தனமாக்குகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
