அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது..

சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் 2013 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரி ஆசிரியர்கள்  போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 3 ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதையடுத்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சருடன் உடன்பாடு எட்டாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், மேலும் மற்ற 2 சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 2013 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரி TET ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.