சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 920 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 53,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 6750 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் இன்று 115 ரூபாய் குறைந்து 6635க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சுமார் 1000 ரூபாய் குறைந்து இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து 86.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது