சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்