நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் டெலிவரி சம்பந்தமான புகார்களை சமீப காலமாக அதிக அளவில் பதிவு செய்து வரும் நிலையில் இதனை ஈடு செய்ய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமேசான் நிறுவனம் ஒரு முக்கிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

அதாவது அமேசான் லைட் மெம்பர்ஷிப் கட்டணத்தை 999 ரூபாயிலிருந்து 799 ரூபாயாக குறைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அமேசான் ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் திட்டம் மூலமாக ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த அதே நாளில் டெலிவரி பெற முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு 25 ரூபாய் கேஷ் பேக், சிறப்பு தள்ளுபடி, மினிமம் ஆர்டர் மதிப்பு இல்லை, இலவச டெலிவரி மற்றும் ஒரு வருட பிரைம் வீடியோஸ் சேவை போன்ற பல சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.