இந்தியாவில் பணக்கார யூடியூபராக ‘BB Ki Vines’ என்ற சேனலின் உரிமையாளர் புவன் பாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். வெறும் 29 வயதாகும் இவருக்கு யூடியூப்பில் சுமார் 2.6 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்க. இவர் ரூ.122 கோடி சொத்து மதிப்போடு நாட்டின் பணக்கார யூடியூபராக இருந்து வருகிறார். குஜராத் மாநிலம் வதோதராவில்ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர் முதலில் இசையமைப்பாளராகத் தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். பின்னர் யூடியூபில் நுழைந்த இவர், காமெடியான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது இந்தியாவில் பணக்கார யூடியூபராக வலம் வருகிறார்.
