இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட பல்வேறு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் குழந்தைகளின் நல வாழ்வுக்காக எதிர்கால பயன்பாட்டிற்கு உதவும் வகையில் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பால் ஜீவன் பீமா திட்டம் என்ற பெயரும் உள்ளது. குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் முதிர்ச்சியில் மூன்று லட்சம் ரூபாய் வரை பலன்கள் கிடைக்கும். அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் வரை இந்த தொகையின் பலனை பெறலாம். குழந்தைகள் ஐந்து முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் பெற்றோர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பாலிசி முடிவதற்கு உயிர்வடைவதற்குள் பெற்றோர்கள் உயிரிழந்து விட்டால் குழந்தைகள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு, வருடாந்திர முதலீடுகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.