மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு  செய்திருந்தால் அவர்கள் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் முழு சீட்டு கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் ரயிலில் ஏறுவதற்கான உரிமை வழங்குவதாக அர்த்தம்.

அதாவது இந்த சீட்டு கிடைத்த இருவர் பக்கவாட்டு லோயர் பெர்த்தில் சீட்டை பகிர்ந்து கொள்ளலாம். இதனால் பயன்களுக்கு இடையே சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரயில்வே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதாவது இதுபோன்ற பயணிகள் உடைய தேவையை கரூத்தில் கொண்டு ஏசி வகுப்பில் பயணிக்கும் RAC  பயணிகளுக்கு போர்வை, பெட்ஷீட், துண்டு போன்றவை முழுமையான பெட் ரோல் கிட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .பயணம் செய்ய ஆர்ஏசி பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஏற்கனவே இதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.