புதுச்சேரியில் மின்துறை சார்பில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசுகள் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறைந்த மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 6.35 ரூபாயிலிருந்து ஏழு ரூபாயாகவும், அதி உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு 5.50 மிகவும் உயர்த்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தது மின் கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் இந்த புதிய மின் கட்டண உயர்வு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.