அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது நாசாவில் (NASA) உயர்ந்த பதவியில் உள்ள 2,145 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு, பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் நாசா ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டு நிலா மற்றும் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டங்கள் வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என விஞ்ஞான வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் செலவுகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே பல விண்வெளித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நேரடி பணிநீக்கம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, பணிநீக்கப்பட்ட ஊழியர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்துவிடப்பட்டது என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நாசா, இந்த நிலைமை எதிர்கால ஆராய்ச்சிகளுக்கே பெரும் தடையாக அமையும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
