அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தொழிலதிபர் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போது சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர்.

இதனை அடுத்து ட்ரம்புக்கும், மஸ்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் தனது பதவியை விட்டு விலகினார். இருப்பினும் தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுத் துறையில் உள்ள 1300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, அமெரிக்காவில் உள்ள உள்நாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்த 1107 பணியாளர்கள் மேலும் வெளிநாட்டுப் பணிகளை மேற்கொண்டு வந்த துணை தூதர்கள் உட்பட 246 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணமாக நிர்வாக மறு சீரமைப்பில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.