மெக்ஸிகோவில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டிருந்த TUI ஏவியேஷன் விமானத்தில் நடந்த நிகழ்வு, பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணத்தின் போது, ஒரு இளம் ஜோடி விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் விமான ஊழியர்கள் மற்றும் விமானி எவ்வளவு வேண்டிக் கேட்டாலும், கழிப்பறையிலிருந்து வெளியே வர மறுத்ததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக அந்த ஜோடி வெளியே வராததால், விமானி மெய்ன் (Maine, USA) எனும் இடத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். முதலில் மெக்ஸிகோ – லண்டன் நேரடி பயணமாக இருந்த இந்த விமான சேவை, பயணத் தாமதம் காரணமாக மொத்தம் 17 மணி நேரம் இழப்பை சந்திக்க வைத்தது. இந்த நிலைமை பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இரவு 9.30 மணியளவில், அந்த இளம் ஜோடி தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே வந்ததாக விமான ஊழியர்கள் தெரிவித்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் வலியுறுத்தினர். சம்பவத்திற்குப் பிறகு விமானி பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர் விமானம் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. இச்சம்பவம் தற்போது லண்டனில் உள்ள ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் டெர்ரி என்பவரும் ஒருவர் ஆவார்.
