அடையாளம் காண முடியாத பறக்கும் பொருள்கள் எனப்படும் UFOக்கள், பல ஆண்டுகளாகவே மர்மமாகக் காணப்படுகின்றன.

பலர் இவற்றை ஏலியன்களின் வாகனங்கள் என கருதுகின்றனர். இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு, ஏமன் கடற்கரையின் அருகே, ஒரு அமெரிக்க ஏவுகணை, மேலிருந்து பறந்த மர்மமான UFO மீது நேரடியாக மோதியது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சம்பவம் மிகச் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அமெரிக்க பாதுகாப்புத் துறை இதனை ரகசியமாக வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணை தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதன் அடிப்படையில், சம்பவத்தின் ரகசிய வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் கசிய, அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், விண்வெளியில் பறந்துவரும் மர்மப்பொருள் மீது, நிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தெளிவாக மோதும் காட்சி பதிவாகியுள்ளது.

“>

 

இதனால், “UFO உண்மையில் இருக்கின்றதா?” என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை உலக அளவில் வலுப்பெற்று வருகிறது. தற்போது இந்த வீடியோவைப் பற்றியும், அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு ஆய்வுகளையும் கொண்டு அமெரிக்கா விரிவான விளக்கங்களை அளிக்க ஒத்துழைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.