இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள எளிய டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. கொத்தமல்லி மற்றும் புதினாவை புதிதாக வைத்திருக்க, ஓட்டைகள் உள்ள பாத்திரத்தில் அவற்றை வைத்து, மேலே டிஷ்யூ பேப்பர் போட்டு மூடினால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்குமாம். தக்காளி அழுகாமல் இருக்க, அதன் மேல் பகுதியில் சிறிது எண்ணெய் தடவினால், குளிர்சாதன பெட்டி இல்லாமலேயே பாதுகாக்கலாம். மேலும், நட்ஸ் வகைகளை ஈரப்பதம் இல்லாமல் வைக்க, ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது அரிசியை மடித்து, நட்ஸ் உள்ள டப்பாவில் வைத்தால் ஈரம் வராது என்று கூறப்பட்டுள்ளது.
அரிசியில் பூச்சி வராமல் தடுக்க, பிரியாணி இலை, கிராம்பு, வத்தல் போன்றவற்றை அரிசியில் புதைத்து வைத்தால் போதுமாம். இது பூச்சிகளை விரட்ட உதவும். எலுமிச்சை பழத்தை ஒரு வாரம் வரை வாடாமல் வைக்க, அதை தண்ணீரில் மூழ்க வைத்து வைத்தால், குளிர்சாதன பெட்டி தேவையில்லை. இந்த எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்கள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
