பெருவில் உள்ள லா மோலினா மாவட்டத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் நடந்த அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று, அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு பெண் தனது வாகனத்தை நிறுத்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கடையின் கண்ணாடி சுவரில் மோதினார். இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர், மேலும் கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், முடிதிருத்தும் கடையில் மக்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தபோது, திடீரென ஒரு கார் கண்ணாடி சுவரை உடைத்து உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது. கார் நேரடியாக அங்கிருந்த இரண்டு பேரை இடித்ததுள்ளது.
விபத்து நடந்தபோது, காரை ஓட்டிய பெண்ணுடன் ஒரு முதியவர் இருந்தார். அந்தப் பெண் தவறுதலாக பிரேக் செய்ய வேண்டிய இடத்தில் வேகமாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.