ஈரானின் புதிய உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நபர், அமெரிக்காவின் ஆசீர்வாதம் இன்றி நீண்ட காலம் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, ஈரானுக்கு ஒரு தகுதியான மற்றும் நல்ல தலைவரைத் தானே தேர்வு செய்யப் போவதாகவும், அதற்கான ஆட்கள் தன் வசம் இருப்பதாகவும் கூறி சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளார்.
ஈரான் நாடு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்டை நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிக்கத் துடித்ததாகவும், ஆனால் தனது சாணக்கியத்தனமான நடவடிக்கைகளால் அதைத் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சால் அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
