துபாயில் நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழல் காரணமாக, அங்கு தங்கியிருந்த பிரபல முதலீட்டாளர் ‘ஈலான் ட்ரேட்ஸ்’ (Elon Trades) என்பவர் நாட்டை விட்டு வெளியேறி ஓமனுக்குத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தான் தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகிலேயே ட்ரோன்கள் வெடித்ததாகவும், ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோவை பகிர்ந்ததற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு தனது ‘எக்ஸ்’ (X) தளக் கணக்கை முடக்கியதாகவும் அவர் பரபரப்பு புகாரை அடுக்கியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதல் அச்சத்தால் ஒரு வார காலம் கட்டிடத்தின் அடித்தளத்திலேயே பதுங்கியிருந்ததாகக் கூறும் அவர், நிலைமை மோசமாவதை உணர்ந்து எல்லை வழியாகத் தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், வசதி இருந்தால் அங்கிருந்து வெளியேறுவதே நல்லது என்றும் அவர் பதிவிட்டுள்ளது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.