அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியல் பயின்று வந்த 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா, பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
ஆறு நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்ததைச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை ஐஐடி-யில் (IIT Madras) இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
ஸ்ரீனிவாசய்யா கடைசியாக வளாகத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில், அவரது பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி அடங்கிய பையுடனும் டில்டன் பிராந்திய பூங்கா அருகே கண்டெடுக்கப்பட்டது. “ஹைப்பர்லூப்” தொழில்நுட்பத்திற்காகக் காப்புரிமை பெற்ற அளவுக்குப் புத்திசாலியான ஒரு மாணவர் இப்படி மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வரத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
