அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேட்டர்லேன்ட் ஆர் லாண்டோ உயிரியல் பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை முதலையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமான அல்பினோ முதலைகள் பிங்க் நிற கண்கள் கொண்டவையாக இருக்கும். ஆனால் 49 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த லூசிஸ்டிக் முதலை நீல நிற கண்கள் கொண்டுள்ளது. உலகில் இது போன்ற அரியவகை வெள்ளை முதலை இருப்பது இதுவே முதல் முறையாக உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது. தற்போது அந்த முதலையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.