ஹமாஸ் பிடியில் உள்ள பிணை கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் காசா மக்களை தாக்கியதோடு சர்வதேச அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் வழங்கிய மனிதாபிமான பொருட்களை ஹமாஸ் கொள்ளை அடித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

மக்களை விட பயங்கரவாதத்திற்கே ஹமாஸ் அமைப்பு முன்னுரிமை கொடுக்கும் என்று கூறிய இஸ்ரேலிய பாதுகாப்பு படை நிவாரண பொருட்களை திருடும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.