ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தடம் பதித்து வருகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக வங்காள தேசத்தில் தீயணைப்பு துறையில் பெண்கள் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் டாக்கா பகுதியில் 15 பெண்களுக்கு தீயணைப்பு வீராங்கனைகளாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிந்து இருந்தாலும் தீயணைப்பு வீராங்கனைகளாக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இது பாலின பாகுபாட்டை நீக்கும் நடவடிக்கைகளில் ஒன்று என்று அந்நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் தெரிவித்துள்ளார்.