இஸ்ரேல் ஹமார்ஸ் இடையேயான போரில் பல அரபு நாடுகள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி வந்த தொழிலதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.

அதேபோன்று இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்களையும் தாக்க துவங்கினர். இந்நிலையில் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் ட்ரோன்களை தாக்கி வீழ்த்தியுள்ளது. இதனால் கப்பல் மீதான தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் செங்கடல் பகுதியில் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.