இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களை பாதுகாப்பான பகுதி என்று தெற்கு காசாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கேயும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி இந்த போரில் பொதுமக்கள் பாதுகாப்பாக தெற்கு பகுதிக்கு இடம்பெற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தற்போது தெற்கு பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.