பிரபல நடிகை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்தம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. எனினும், அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தனது செல்ல நாய் ஆராவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள ராஷ்மிகாவின் விரலில் மோதிரம் தெரிந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ராஷ்மிகா நிச்சயதார்த்தம் முடிந்ததை மறைமுகமாக உறுதிப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இந்த மாதம் 3ஆம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பின் விஜய் தேவரகொண்டா பொதுவில் தோன்றியபோது, அவரின் விரலிலும் மோதிரம் காணப்பட்டது. இவர்கள் இருவருக்கும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ராஷ்மிகாவும் மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்டிருப்பதால், நிச்சயதார்த்த செய்தி உண்மைதான் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். எனினும், இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் வாரிசு, சுல்தான், குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் சினிமாவிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.