விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆக இருக்குமோ என்ற அச்சம் விஜய் ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
பலரும், “இது உண்மையாக இருந்தால் வருத்தம்தான்; விஜயின் கடைசி படம் ஒரு வலுவான அரசியல் கருத்துக்களுடன் அமைய வேண்டும்” என கூறி வந்தனர். ஆனால், சிலர் “இயக்குநர் ஹெச். வினோத் விஜய்க்கு ஒரு நல்ல அரசியல் பின்னணியுடன் கூடிய சமூகப்படம் வழங்குவார்” என நம்பிக்கை தெரிவித்தனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் வசனங்கள் விஜயின் அரசியல் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
— Blue Sattai Maran (@tamiltalkies) October 10, 2025
“>
ஆனால் தற்போது வெளியாகிய தகவலின்படி, ஜனநாயகன் திரைப்படக்குழு பகவந்த் கேசரி படத்தின் கதை உரிமையை ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த படம் முழுமையான ரீமேக் ஆக இருக்கிறதா அல்லது அதிலிருந்து சில முக்கிய காட்சிகள் மற்றும் உரையாடல்களை மட்டும் பயன்படுத்துவதற்கான அனுமதி தானா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக, பாலகிருஷ்ணா பள்ளி மாணவிகளிடம் “குட் டச், பேட் டச்” குறித்து பேசும் பிரபல வசனம் ஜனநாயகன் படத்திலும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
