தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு 40 வயது கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் திரிஷா பற்றிய திருமண வதந்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திரிஷா திருமணம் செய்வதாகவும் இது வீட்டில் பார்த்து நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றும் சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.

இதற்கு தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில் என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் திருமணம் குறித்த செய்திகள் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.