லக்னோவில் பிரபல போஜ்புரி நடிகர் பவன்சிங், 2018ஆம் ஆண்டு பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிசிங்கை திருமணம் செய்தார். திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தற்போது இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அவரது மனைவி ஜோதிசிங், கணவர் பவன்சிங்கை எதிர்த்து திடுக்கிடும் அளவிலான புகாரை பதிவு செய்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, “திருமணத்திற்கு பிறகு பவன்சிங் என்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினார்” எனக் கூறியதுடன், கருக்கலைப்பு மாத்திரைகளை கட்டாயமாக கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

“நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய போதிலும், அவர் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து சித்ரவதை செய்தார். ஒவ்வொரு முறையும் அதை எதிர்த்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சலால் 25 தூக்குமாத்திரைகள் சாப்பிட்டு மயங்கினேன். பிறகு தான் அந்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்” என்று கூறிய ஜோதி, கணவரின் கொடுமையால் தன்னுடைய வாழ்க்கை நரகமாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை நடிகர் பவன்சிங் மறுத்துள்ளார். “ஜோதி லக்னோவுக்கு வருவதாக முன்பே இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். என்னைப் பற்றி உண்மை தெரியவேண்டுமென்றால், நான் எப்படி நடந்துக் கொண்டேன் என்பதை நானும், ஜோதியும், கடவுளும் தான் அறிவோம்.

விவாகரத்து முடியும் வரை வீட்டைவிட்டு வெளியேறமாட்டேன். ஒரே வீட்டில் இருந்தபடியே விவாகரத்து கேட்பது சரியா? என்று கேட்டேன், ஆனால் பதில் இல்லை” எனக் கூறியுள்ளார். இவர்களுக்கிடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.