தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த். இவரது சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இமெயில் மூலம் விடுக்கப்பட்டதாக தேனாம்பேட்டை காவல் துறையினர் அவசரமாக அவரது வீட்டிற்கு சோதனை நிபுணர்களுடன் சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தியதில் எதுவும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய், கமல்ஹாசன் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவை போலியானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
