தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதீன் என்ற போட்டியாளரை எதிர்த்து பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காரணம், அவர் முதல் வாரத்திலிருந்தே தன்னை “பாதுகாப்பு தரக்கூடிய நபர்” என்ற தோற்றத்தில் காட்டி, சில போட்டியாளர்களை தன் பக்கம் இழுத்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளார். இதனால் அவருக்கு கண்மூடித்தனமான ஆதரவு வீட்டிற்குள் அவருக்கு கிடைத்துள்ளது; அவர் தவறு செய்தாலும் யாரும் அதை எதிர்க்காமல் கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதை நுட்பமாக கவனித்த நடிகர் விஜய் சேதுபதி, இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சியில் கம்ருதீனின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சித்தார்.

அந்த நிகழ்வில், கம்ருதீன் செய்த தவறை அவரே ஒப்புக்கொள்ளும்வரை விஜய் சேதுபதி வலியுறுத்தினார். அதேசமயம், அவருக்கு “ஜால்ரா” அடித்து ஆதரவு கொடுத்த போட்டியாளர்களையும் கேள்வி கேட்டார். பிரவீன் காந்தியின் நடத்தைப்பற்றியும் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, “தவறை ஒப்புக்கொள்வது நல்ல பழக்கம்.

“>

 

சம்பந்தமில்லாமல் யாராவது உங்களுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்றால், அவரை சந்தேகப்படுங்கள். அவரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என்று அறிவுரை கூறினார். இந்த எபிசோட் ஒளிபரப்பான பின், சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் “விஜய் சேதுபதி சொன்னது மிகச்சரியானது, கம்ருதீனின் முகமூடி கிழிக்கப்பட்டது” என பாராட்டி வருகின்றனர்.