மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தந்தை கடந்த ஆண்டு இறந்ததால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 10-ம் வகுப்பு வரை படித்த அவர், பின்னர் ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

அந்த நேரத்தில், 19 வயது வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், ஆசை வார்த்தைகளால் கவர்ந்த வாலிபர், சிறுமியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நகர்நல அதிகாரி முத்துலட்சுமி தெற்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் 19 வயது வாலிபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.