தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. புன்னகை அரசியாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட சினேகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். நடிகர் விஜயின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வரும் சினேகா தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் பிரசன்னா உடன் கலந்து கொண்டார்.

இப்போது நடனமாடி போட்டியாளர்களை நினைத்து நிகழ்ச்சி அடைந்து சினேகா பாராட்டினார். அவரைத் தொடர்ந்து பேசிய பிரசன்னா, வயதான காலத்திலும் நான் உன்னுடன் இப்படி இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். நீ கேட்ட சினேகா ரொம்ப அழகா இருந்தது நன்றி என்று கூறி அழுதார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.