தமிழ், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய ஹன்சிகாவுக்கு திருமணத்துக்கு பிறகும் வாய்ப்புகள் குவிகிறது. சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி ஹன்சிகா அளித்திருக்கும் பேட்டியில் “நான் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

எனினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கும்போது முழு படத்தையும் தன் தோளில் சுமக்கவேண்டிய பொறுப்பு இருக்கும். நான் அதற்கு தயாராக உள்ளேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சவாலான வேடங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது.  திரைத்துறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன் என்று அவர் கூறினார்.