ரஜினி நடிக்கக்கூடிய “ஜெயிலர்” திரைப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்து வருகிறார். இதனிடையே சென்ற சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தமன்னா. ஒன்று தமன்னாவின் காதல் விவகாரம், பின் அண்மையில் வெளியான வெப் தொடரான “ஜீ கர்தா”வில் அவரது தாராளா நடிப்பு, அதோடு விரைவில் வெளியாகவுள்ள “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” வெப் தொடரிலும் அவரது நெருக்கமான நடிப்பு ஆகும்.

இந்த தொடரில் தமன்னா தன் காதலர் விஜய்வர்மா உடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” தொடரை வெளியிடக்கூடிய  நெட்பிளிக்ஸ் OTT நிறுவனம் தமன்னா-விஜய் வர்மாவை வைத்து நெருக்கமான போட்டோஷூட் எடுத்து புரமோஷன் செய்து வருகிறது. இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் ? காதலா (அ) காமமா என அந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர்.