பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஸ்டீயரிங் பழுதடைந்த டிராக்டரைக் கட்டுப்படுத்த மரக்கட்டையை பயன்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “பணம் இல்லாததால் ஸ்டீயரிங் மாற்ற முடியவில்லை.

அதனால் புத்திசாலித்தனமாய்  மரத்தில் ஓட்டினேன்” என கூறும் அந்த நபர், சாமானிய விவசாயிகளின் உழைக்கும் திறனை  தாண்டிய புத்திசாலித்தனத்தை காட்டுகிறார். மரக்கட்டையை ஸ்டீயரிங் போல அமைத்து, அதனை திறமையாக இயக்கிய நிலையில் டிராக்டர் நிலைதடுமாறாமல் செல்கின்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bihar (@bihar_day_by_day)

“>

இந்த காணொளி, இந்தியாவின் கிராமப்புற மக்களின் பாரம்பரிய அறிவையும், தன்னிச்சையான தொழில்நுட்பச் சிந்தனையையும் உலகுக்கு காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. செலவு இல்லாமல், சிக்கலான சூழ்நிலையிலும் சொந்தக் கட்டுப்பாட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணும் இந்த முயற்சி, நாட்டு மக்களின்’ சாமர்த்தியத்தை காட்டுகிறது.