இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு குழந்தையின் காணொளி பார்ப்பவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு குழந்தை தனது காலில் ஒரு ரப்பர் பேண்ட் மாட்டிக்கொண்டு, அதைத் தானே கையால் இழுத்து விடுகிறது. பின்னர், அதனால் வலி ஏற்பட்டு குழந்தை அழத் தொடங்குகிறது. இந்தக் காணொளியை பார்ப்பவர்களை சிரிப்பதா அல்லது குழந்தையின் அழுகையால் கவலைபடுவதா என்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்தக் காணொளிக்கு பலரும் வெவ்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், குழந்தை தனக்கு வலி ஏற்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறது என்று கூறுகின்றனர். மறுபுறம், சிலர் குழந்தை தனக்கு பிரச்சினையை தானே உருவாக்கிக் கொள்கிறது என்று கருதுகின்றனர்.
