நிஜாமாபாத் மாவட்டம் சந்திராநகரில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் செல்லும் அதிர்ச்சி தரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே எவ்வித அச்சமுமின்றி அந்த நபர் மின்னல் வேகத்தில் சங்கிலியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றார்.

“>

 

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி அந்த நபரைத் தேடி வருகின்றனர்.