பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதை வலியுறுத்தி பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

​எம்.எல்.ஏ-வை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியபோது, தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. அதிமுக மற்றும் பாஜகவினர் கைதானதைத் தொடர்ந்து பெருந்துறையில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.