தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியும் இந்தப் பந்தயத்தில் இணைந்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ‘தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள இக்குழு, தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளையும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது.
சட்டமன்ற தேர்தல் 2026
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான திருமதி.@DrTamilisai4BJP அவர்கள் தலைமையில்… pic.twitter.com/IZrHQuoAZA
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 18, 2026
“>
ஏற்கனவே அதிமுக தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில், பாஜகவின் இந்த நகர்வு தேசியக் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
