தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு செய்ததாகவும் அதில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 23 தொகுதிகள் பிற கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்த நிலையில் இதில் தேமுதிகவுக்கு 6 சீட்டு ஒதுக்கப்பட்டதாகவும் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு தலா 3 சீட் ஒதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது.
ஆனால் இதனை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மறுத்த நிலையில் தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஆறு சீட்டு ஒதுக்கப்பட்டதாக கூறிய கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்றார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் இதைப்பற்றி எப்படி நீங்கள் பத்திரிகைகளில் விவாதிக்கலாம் என்றும் இனி தேமுதிக பற்றி எங்கள் அனுமதி இல்லாமல் விவாதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மேலும் கடைக்கோடி தொண்டர்களின் மனநிலையை யோசித்துப் பார்க்க வேண்டும் எனவும் ஜனவரி ஒன்பதாம் தேதி மாநாட்டின் போது கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
