அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) தனபால், தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். தற்போதைய த.வெ.க. அரசுக்குத் தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுகவை உடைக்க நினைத்து முடியாததால், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.) பின்னணியை அரசு தீவிரமாக ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் பொருட்டு, இந்த ராஜினாமாக்கள் குறித்து மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத் துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
