தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு கட்சிகளுக்கிடையேயான அரசியல் நகர்வுகள் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் தாய் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள், தேர்தல் பணிகளில் தொய்வின்றி களமாடி, கழகத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
