தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் தவெகவில் இணையப்போவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் இடியாக இறங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் ஈபிஎஸ் – எஸ்பி வேலுமணி இடையேயான பனிப்போர் காரணமாகப் பல மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நிலையில், நட்ராஜ் எடுத்துள்ள இந்த முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நட்ராஜ், தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசித்ததாகவும், விரைவில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையப்போவதையும் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரின் ஆலோசனையைப் பெற்ற பின் நட்ராஜ் இந்த முடிவை எடுத்திருப்பது, அதிமுகவின் கோட்டையில் ஒரு பெரிய விரிசல் விழுந்திருப்பதையே காட்டுகிறது.