புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த வெங்கடேஷ் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.