மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக உலகாணி, கல்லணை மற்றும் அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இதேபோல், ஏற்கெனவே விருதுநகரில் 23 குவாரிகளையும், தென்காசியில் 18 குவாரிகளையும் மூட அமைச்சர் பிரபு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மதுரையிலும் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.