தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை “அணில் குஞ்சு” என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு எதிராக, tvk பெண் தொண்டர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அந்தக் காணொளியில், “அணில் குஞ்சு எப்போதும் உயரமான இடத்தில் தனக்கு வேண்டியவற்றை நல்ல முறையில் எடுத்துக்கொள்ளும். ஆனால், தவளைக் குஞ்சு சும்மா கத்திக்கொண்டே இருக்கும், தன்னோட பசங்களையே அடிக்கும்.

அவருக்கு  பிபி, சுகர் இருக்கிறது, அவர் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும். அவர் கட்சி நடத்துவதற்கு தகுதியற்றவர்” என்று கூறி, சீமானின் விமர்சனங்களை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொண்டார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்தப் பெண் தொண்டர், “தளபதி விஜய் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பவர். எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம். தளபதி விஜய்யை முதலமைச்சராக்குவது எங்கள் முயற்சி மட்டுமல்ல, எங்கள் குறிக்கோளுமாகும்” என்று உறுதியாகப் கூறியுள்ளார்.