மதுரை பாரப்பத்தியில் நடைபெறும் தமிழகம் வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று அதிரடி அதிர்வுடன் துவங்கியுள்ளது. காலை முதலே பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் திரண்ட நிலையில், நடிகர் விஜய் மேடைக்கு வருகை புரிந்து ரேம்ப் வாக் செய்தார்.

மக்களிடையே உற்சாகத்தை கிளப்பிய இந்த தருணத்தில், நெகிழ்ச்சியான ஒரு காட்சி கண்டு ரசிகர்களும், தொண்டர்களும் ஆச்சரியத்தில் உறைந்தனர். ரேம்ப் வாக் தொடங்கியவுடன், சில இளம் தொண்டர்கள் திடீரென முன்னே வந்து நின்று, விஜயை நேரில் பார்த்துப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

“>

 

முன்னால் நின்ற இளைஞர்களை பார்த்த விஜய் ஒரு நொடி திகைத்து நின்று சென்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த தருணங்களை வைத்தே ரசிகர்கள் “அவரே பயந்துட்டாரு பாவம்!” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

“>

 

பொதுவாக சீராக நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் இப்படி நிகழ்ந்திருப்பது புதியதொரு அனுபவமாகும். இளைஞர்களின் திடீர் நெருக்கத்தால் ஏற்பட்ட இந்த விசித்திர தருணம், தவெக மாநாட்டின் பரபரப்பில் இன்னொரு பக்கத்தை உருவாக்கியுள்ளது.