திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவன் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி திருப்பூர் அவிநாசியில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 75 லட்சம் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும் காணாமல் மேலும் 200 சவரன் தங்க நகைகள் கேட்டு கணவன் குடும்பத்தினர் தொல்லை கொடுத்ததால் அந்தப் பெண் காரில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூவருக்கும் ஜாமீன் வழங்கியதோடு காலை மாலை இரு நேரங்களிலும் நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.