நீண்டதூர பயணத்திற்கு பல பேரின் விருப்பமான போக்குவரத்து என்பது ரயில் தான். இதனிடையே IRCTC FTRன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக நீங்கள் ஒரு ரயில் (அ) ரயில் பெட்டியை முன் பதிவு செய்யலாம். இதற்கு பயணத்திற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் (அ) அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்யவேண்டும். நீங்கள் ஒரு FTR ரயிலில் குறைந்தது 2 பெட்டிகளை முன் பதிவு செய்துக்கொள்ளலாம்.

அதே சமயத்தில், FTR ரயிலில் 24 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம். உங்களது பயணம் முடிந்ததும் பாதுகாப்பு வைப்பு தொகையைத் திரும்ப பெறுவீர்கள். இதற்கிடையில் கேட்டரிங் வரம்பின் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும்போது, அந்த வரம்பிற்கு ஏற்றவாறு IRCTC உங்களுக்கு கேட்டரிங் சேவையையும் வழங்குகிறது. எந்த காரணத்துக்காகவும் நீங்கள் முன் பதிவை ரத்து செய்தால், முழு பணத்தையும் திரும்ப பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.